Saturday 2 January, 2010

தொப்புள்கொடி உறவுகள்




ஈர் ஐந்து மாதங்கள்
கருவில் வளர்த்த உயிரை
காணவில்லை..!

களவு போகும் பொருள்களில்
எப்போது அய்யா பிறந்த ஒரு நாளே ஆன
சிசுவை சேர்த்தார்கள்.

உன்னை பெற்று எடுத்து மயங்கி
மருத்துவமனையில்
கிடக்கையில் யாரோ களவாடி விட்டார்களே..!

தொலைக்க கூடிய பொருளையா
தொலையித்துவிட்டேன்,
எங்கே புகார் கொடுப்பேன்..?

நீ எப்படி இருந்தாய் என்று
உன் முகத்தை கூட பார்க்கவில்லையே..!
உன்னை சுமந்த என் கர்ப்பைக்கு தெரியுமோ
உன் அடையலாம்..!

காவலுக்கு என்று இருந்த என் உறவினரின்
எல்லோர் கண்ணிலும்
மண்ணை அல்லவா தூவி சென்றுவிட்டான்
அந்த கள்வன்..!

மருத்தவம் பார்த்த வைத்தியட்சி சொன்னால்
குழந்தையின் வலது காதின் அருகில் மச்சம்
இருந்தது என்று..

கடலுக்குள் ஒரு கல்லை எரிந்து
அதை தேடுவது போல
காது அருகே மச்சம் என்று ஒற்றை
அடையாளத்தை வைத்து கொண்டு எப்படி தேட..?

அழுது அழுது
கட்டியாகி போனது கண்ணீர் மட்டும் அல்ல
உனக்காக என் மார்பில் சுரந்த
பாலும் சேர்த்து தான்.

உலகை அடையாளம் காட்டுவாள் தாய்..!
என் கதையில் நீ அல்லவா என்னை
அடையாளம் காட்ட வேண்டும்.

அனாதையாக்க பட்டாயோ..!
தத்து கொடுக்க பட்டாயோ..!
இல்லை கடத்த பட்டு விட்டாயா..!

எழுதுகிறேன் இக்கடிதத்தை
இதை படிக்கும் யாரேனும்
சொல்லுங்களேன்.. களவு போன என்
குழந்தை எங்கு என்று..?
இப்படி நீ காணாமல் போவாய் என்று
தெரிந்து இருந்தால் அறுக்க விட்டு இருப்பேனா
என் தொப்புள் கொடியை..?



1 comment:

Anonymous said...

Ithuvum migha nanraaga ullathu nanbare.... thangal kavithaigal anaithilum oru ullarntha sogam ullathu pol thonrugirathu.... en kanippu sariyo??