Saturday 2 January, 2010

இதுவும் ஒரு காதல் கதை.!





  காதல் – இது வந்தால் ரசிப்பது எல்லாம் நிகழும், துரும்பாக இருந்தாலும்.

காகிதமும் பேனாவுமாக கவிதை எழுத மரத்தின் நிழலில் அமர்ந்த நொடியில்
இன்னொரு பக்கம் ஒரு காதல் ஜோடி, மர நிழலில் நிகழந்த சில சம்பவங்களை
உங்களுக்காக என் வரிகளில் கவிதை நடையில் ஒரு சிறுகதை.

காதலன்,
இன்று கனவில் என்ன வந்தது தெரியுமா..?
நமக்கு திருமணம் முடிந்து,
நமக்கு அழகாய் ஒரு குட்டி தேவதை பிறந்து
அதை பள்ளிக்கு கூட்டிகொண்டு நீயும்
என் பின்னால் பைக்கில்  உட்கார்ந்து செல்வது போல..

அதற்கு காதலி,
எனக்கும் தான் ஆனால் பொண்ணு இல்லை
குட்டி பையன்.

அவள் பேசுகையில் அவள் விரலில் இருந்த காயத்தை பார்த்து பதறிப்போய்

காதலன்,
ஏய்..! கையில் என்ன காயம்..?

காதலி,
ஒன்றும் இல்லை காய் வெட்டும் போது
கத்தி பட்டு விட்டது..

காதலன்,
பாவம், கத்திக்கும் தெரியவில்லை,
 உன் விரலுக்கும் காய்கறிக்கும்
 வித்தியாசம்.
காதலி,
அப்போ என்ன விரல பார்த்த
 காய் மாதிரி இருக்கா..?

இது உனக்கு எப்படி ஆச்சுனு தெரியல..

காதலன்,
ஆமா தெரியல.. காய் வெட்டும் போது
தூங்கிட்டே வெட்டினா இப்படிதான் ஆகும்.
காதலி,
இல்லடா மடையா…
உன் நினைவில் இருத்தால்,
காய் நறுக்கும் போது விரலில் பட்டு விட்டது.

காதலன்,
அப்ப கரெக்ட் தான்
தூங்கிட்டு கனவு கண்டால்
வேற என்ன ஆகும்..? விரலுதான் வெட்டிகுவாங்க..!

இப்படியே கேலியுமாக, காதுலுமாக தொடரந்தது அரட்டை.
இதற்கிடையில் நினைத்து கொண்டேன், பழக்கம் இல்லாத யாரோ ஒருவரை
மணந்துகொண்டு வாழ்வதை விட காதலித்து திருமணம் செய்து கொள்வதும்
 நல்லதுதான்.
சில மாதங்களுக்கு பிறகு,
அங்கு அவன் மட்டும் இருந்தான், சில மணி நேரம் கழித்து,
கையில் இருந்த காகிதத்தை கிழித்து போட்டுவிட்டு நடந்தான்..

அநாகரிகம் என்றாலும், ஒரு ஆர்வத்தில் எடுத்து பார்த்தேன்,
யாரோ கல்யாண அழைப்பிதழ். அப்போது யாருடையது என்று தெரிய வில்லை,
 அங்கேய போட்டு விட்டு சென்றுவிட்டேன்.

பின்னொரு நாளில், மீண்டும் அங்கு அவர்கள் இருந்தார்கள்.
சில நேரம் மௌனத்துக்கு பிறகு, அவன் ஆரம்பித்தான்….!  நீண்ட பெரு மூச்சுக்கு பிறகு

காதலன்,
அப்ப நம்ம பார்ப்பது இன்றுதான் கடைசி..
நம்ம காதல் அவ்வளுவுதானே..?

கண்ணீருடன் தழுதழுக்கும்  குரலில்,
காதலி,
எனக்கு வேற வழி தெரியலடா…
என்னால அம்மா  அப்பாவை எதிர்த்து
 ஒன்னும் சொல்ல முடியாது…

காதலன்,
நாம் பழகிய இந்த
 இருபது மாதங்களில்….

என்று பேச தொடங்கும்…போது இடைமறித்து அவள் சொன்னால்..

காதலி,
இருபது மாதங்களை விட எனக்கு
இருபது வருடங்களே எனக்கு
இப்போது பெருசா தெரியுது…

இதற்கு மேல இங்க இருந்தா
என்னால உன்ன விட்டு பிரியமுடியாது…
நீயும் என்னை மறந்து விட்டு
வேற ஒரு நல்ல பெண்ணை பார்த்து
திருமணம் செய்துகொள்..!

என்று கூறிவிட்டு கண்ணீருடன் அந்த இடத்தை விட்டு வேகமாக ஓடி சென்றாள்.
சில நொடிக்கு பிறகு, அங்கு அவன் மட்டும் கண்ணீருடன் அமர்ந்து இருந்தான்.
அந்த இடத்தில் இருந்து கனத்த மனதுடன் அந்த இடத்தில இருந்து அமைதியாக சென்றேன்.
சில வாரங்களுக்கு பிறகு, நான் மீண்டும் புத்தகம் பேனாவுடன்  அதே இடத்துக்கு சென்றேன். நான் செல்லும் முன், அந்த இடத்தில அவன் மட்டும் இருந்தான்…
என்னை கண்டு அடையாளம் கண்டு சிரித்தான்.

அவனே கேட்டான்,
என்ன இந்த பக்கம் ரொம்ப நாள் காணோமே என்று..?

இந்த இடத்தில், என்னை பல முறை அவனும் அவளும் பார்த்து இருக்கிறார்கள் என்று, கவிதை எழுத நான் வருகிறேன் என்று அவனுக்கும் தெரியும்,  பல முறை பார்வையுடனும் சிரிப்புடன் எங்கள் பேச்சும் அறிமுகமும் முடிந்துபோகும் இன்று முதல் முறையாக வந்து பேசினான்.  

வெளியூர் சென்று விட்டேன் என்றேன்.
சற்று அமைதியான குரலில் ஆரம்பித்தான்..

அதுவந்து கவிஞரே..!

அது.. அது…  என்று இழுத்தான், ஏதோ சொல்ல துடிக்கிறான் என்று புரிந்து கொண்டு அவனது முகத்தை உற்று நோக்கினேன்.

மெதுவாக மரத்தை நோக்கி திரும்பினான்.., என்ன சொல்ல போகிறான் என்று ஆர்வத்தில் என்ன சொல்லுப்பா…? என்றேன்,
அவனே பேச்சை தொடர்ந்தான்.. மரத்தை நோக்கி நடந்துகொண்டே…

கவிஞரே..!

உங்களுக்கு இந்த பூங்காவில்,
வேற மரங்கள் கிடைக்கும்.
இந்த இடத்தை மட்டும்
எனக்கு விட்டு விடுங்கள்…

ஏன்? எதற்கு? என்று கேட்க தோன்றவில்லை, இப்போது மரத்தின் திசையில் இருந்து திரும்பி என்னை நோக்கி,

இங்குதான் என் காதலின் நினைவுகளை
புதைத்து வைத்து இருக்கிறேன்.
இன்னும் சில நாட்களில் அவளுக்கு
வேற ஒருவனுடன் திருமணம்.

என்று கூறியவன் விழிகளில் சில நீர் துளிகள் இருந்தை கண்டேன்.

நடந்தை எண்ணி கவலை படாமல்
உன் வாழ்கையை நீயும் அமைத்து கொள்.

கண்டிப்பாக  அவளோட கடைசி ஆசையை  நிறை வேற்றுவேன்.
வேற பெண்ணை பார்த்து திருமணம் செய்து கொள்வேன்.
என்னை தேற்றி கொள்ள இன்னும் சில நாட்கள் ஆகும்.. என்று இழுத்தான்.


இம்முறை இடை மரித்தேன்..,

உன் விருப்பம்.. என்று சொல்லி விட்டு மீண்டும் நானே தொடர்ந்தேன்.
மனிதனுக்கு மறப்பது ஒன்று குணம் இருப்பதால் மட்டுமே..!
இவ்வுலகம் இன்னும் இயங்கி கொண்டு இருக்கிறது..
இல்லையென்றால் எல்லோரும் நினைவுகளின் தாக்கத்தினால்
மன நோயாளிகளாக அலைந்து கொண்டு இருப்பார்கள்…

ஆகவே…!
நீயும் விரைவில் ஒரு நல்ல வாழ்கை அமைத்துக்கொள் என்று சொல்லிவிட்டு அவனது தோழ்களை தட்டி கொடுத்து விட்டு அந்த இடத்தை விட்டு நடந்தேன்.

கண்ணீருடன் அங்கு அவன் மட்டும் நின்று கொண்டு இருத்தான்.

திரும்பி நடக்கையில்.. என் மனதுக்குள் நினைத்து கொன்றேன்,
இதுவும்  ஒரு காதல் கதை தான்  என்றாலும் மனிதர்களும் அவர்களின் உணர்வுகளும் வேறுபட்டு காதலையும் கதைகளும்  வித்தியாசப்படுத்துகின்றன.
சில வருடங்கள் கழித்து, அதே பூங்காவுக்கு சென்றேன், அங்கு இருந்த சில மரங்கள் வெட்டப்பட்டு பூங்காவின் இடமும் பாதியாக இருந்தது.
ஆனால் அவன் மரமும்,  மற்ற சில மரங்களும் மட்டுமே இருந்தது.
அந்த மரத்தின் நிழலில் இன்றும் அவனும் அவனுடன் ஒரு பெண்ணும் ஒரு குட்டி பையனும் அமர்ந்து இருந்தார்கள்.

இவர்களை போல சிலர் இருந்து விட்டால், காதல் வாழுமோ இல்லையோ ஆனால் மரங்கள் வாழும்.

2 comments:

Anonymous said...

மரம் வளர்ந்தால் நல்லது.
தாடிதான் வளரக்கூலாது.
கதை மிகவும் நன்றகா உள்ளது.

Anonymous said...

Nanbare.. ungal ehuthai padithen....neengal oru sirpiyai polave nanraaga vadithullirgal.... ithai paditha podhu ennayum ariyamal en kangalil neer....