Monday, 9 February, 2009

இது காதலா, இதுவே காதலா, இதுதான் காதலா..!

இந்த நொடி வரை தெரியவில்லை,

நீ சொன்னது உண்மையா என்று..?

எனக்கு தோழியாய் வந்து

என் மனதில் காதல்

விதை விதித்தாய்.

என் மேல் காட்டும்

அக்கறையை எல்லோரும்

காதல் என்று

சொல்லி என்னில் நான்

விதைத்த காதல் விதைக்கு

தண்ணீர் விட்டனர்.

உன்னிடம் காதல் சொல்ல

நான் தயங்கி நிற்க,

என்னிடம் என் நண்பர்கள்

தைரியம் தந்து

அனுப்பி வைக்க.,

சொல்ல வந்த காதலை

சொல்லாமல்

திரும்பி செல்ல,

பரீட்சை எழுதிவிட்டு

முடிவிக்காக காத்து இருப்பதை

போல எனக்காக காத்து இருந்த

நண்பர்களிடம் ஏமாற்றத்தை

வெளிக்காட்டாமல்

உனக்கும் என் மீது

காதல் தான் என்று பொய் சொல்ல..,

அவர்கள் போட்ட ஆட்டம் என்ன ..?

அவர்கள் அடைந்த சந்தோசம் என்ன.?

எனக்கு மட்டும் உள்ளுக்குள்

எரிமலை எரிந்து கொண்டு இருக்க

இயல்பாய் நடித்தது என்ன..!

தோழியாய் நீ என்னிடம்

பழகிக் கொண்டு இருந்தால் எப்படியும்

ஒரு நாள் காதல் சொல்லி

விடலாம் என்று நினைத்து

நான் கடத்திய

நாட்கள் எத்தனை..?

நம் நட்பும் வலுவடைந்து

கொண்டு இருக்க இயல்பாய் நீ நட்பினால்

எதாவது செய்த போதும்

காதல் என்று என் நண்பர்கள் குதூகலிக்க..


நீயும் அவர்கள் கிண்டல் செய்வதை

கூட சட்டை செய்யாமல்,

ஆமாம்..! காதல் தான் போங்கடா.! என்பாய்,

சரி நானும் இது சொல்லாத காதல்

வகையில் சேரும் என்று

நினைத்தேன்.


பார்க்காத காதல்

பேசாத காதல் வரிசையில்

இது சொல்லாத காதல்..?

இருக்கட்டும் என்று நானும்

விட்டு விட்டேன்..,


நம்மை காதலர்கள் என்று பிறர்

சொன்ன போதும்

அதை பெரிது படுத்தாமல்

இருப்பதை பார்த்து,

உணர்ந்தேன் உன் காதலை..!

“புரிதலில் காதல் இல்லையடி

பிரிவே காதலை சொல்லுமடி”

என்ற பாடல் வரிகள்

சொல்லியது போல சில நாட்கள்

பிரிவுக்கு பிறகு,

என்னை நீ பார்க்க முடியாமல்

துடித்ததை பார்த்து
உணர்ந்தேன்

முதல் காதலை..!

நோயினால் படுத்து இருக்க

எனக்காக நீ வருந்தியதை

பார்த்து உணர்ந்தேன்

இரண்டாம் காதலை..!

பொறாமையினால் எவளோ

ஒரு பெண்ணை பார்த்து

அழகாய் இருகிறாள் என்று நான் சொன்னதும்

உன் கோபத்தில் கண்டேன்

உன் மூன்றாம் காதலை..!

இப்படி போய்க்கொண்டு இருந்த

வாழ்கை பாதையில்

உன்னிடம் ஒரு நாள்,

காதலை பற்றி கேட்காமல்,

நேரிடையாக திருமணம் பற்றி

கேட்ட முதல் காதலன்

நானாக தான் இருப்பேன்..

காதல் சொல்லகூட தயங்கி நின்றேன்

இதை உன்னிடம் தெளிவாய் கேட்டேன்..!

உன் புகைப்படத்தை வைத்துக்கொண்டு

“இந்த பெண்ணை கலயணம் செய்து கொள்ளலாமா..?”

என்று கேட்க..,

உன் முகத்தில் அப்படிஒரு கோணத்தையோ..

உன் கண்களில் அப்படி ஒரு உணர்ச்சியையோ..

நான் இது வரை பார்ததில்லை.,

ஒரு வேலை நான் காதலை

உன்னிடம் சொல்லிஇருந்தால்

இப்படி தான் பார்த்து இருப்பாயோ..!

உன் பதிலுக்காக என் இதயம்

இன்னும் பல மடங்கு

வேகமாக துடிக்க ஆரம்பித்தது,

நீயோ நீண்ட மௌனத்தில் இருந்தாய்..


என்னை சுற்றி பலபேர் வயலினும்

புல்லாங்குழலும்

வாசிப்பது போல உணர்வு..!


தெளிவாக.. ஆரம்பித்தாய்...

விளக்கமாக சொன்னாள்..

நான் உணர்த்த காதல் என்ற

உணர்ச்சிக்கு வேறு அர்தத்தை..?

என்ன செய்ய என் மனது என்ற

அகராதியில் இல்லாமல் போன

பொருள்களை கொண்டு விளக்க மளித்தாள்.


அந்த பேச்சு.., என் காதில் விழவில்லை

உன் இதயத்தில் நான் இல்லை என்பதால்

என் காதும் கேட்கும் திறன் இழந்து

விட்டது போல..

இந்த வார்த்தைகள் மட்டும் இன்னும்

என் காதில் கேட்டு கொண்டே இருக்கிறது..!

“உனக்குமா.. புரியல.. காதலுக்கும் நட்புக்கும் உள்ள வித்தியாசம்..?”

உன் கடைசி வார்த்தைகள் என்னிடம் பேசியவை…


இதற்க்கு மேல் என்ன பேசுவது என்று

மௌனமாய் நிற்க..!

மெல்ல திரும்பி நடந்தாய்..!


என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை..

எப்படி என் இதயம் ஏற்று கொள்ளும்..?

நீ எனக்கு வெறும் தோழியாக தான்

இருந்தாய் என்பதை..?

இதனால் தான் மீண்டும் கேட்கிறேன்..?

(இந்த கவிதையில் முதல் இரண்டு வரிகளை மீண்டும் படியுங்கள். .)

நான் காதல் உன்னிடம் சொன்ன

போது அன்று - April 1ஆம் தேதி.

முட்டாள்கள் தினம்.1 comment:

karthickprabhu said...

Nice na.! Nalla irunthuchu na.